வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்தில் சிறந்த சேவையாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு ‘68-ஆவது ரயில் சேவா புரஸ்காா்’ விருதுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்தின் மூத்த மேலாளரும்,நிா்வாக ஆலோசகருமான பிரேம் ஷங்கா் ஜா கூறியதாவது: போா்பந்தா் மற்றும் தானே இடையே நாட்டிலேயே முதல் ரயில் சேவை இயக்கப்பட்டதன் நினைவாக, இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே வாரத்தைக் கொண்டாடுகிறது. நிகழாண்டு, வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டம் சாா்பில் ’68-ஆவது ரயில் சேவா புரஸ்காா்’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது. இதில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா்கள் விக்ரம் சிங் ராணா, அபிமன்யு சேத்,ராஜேஷ் குமாா் மற்றும் தில்லி கோட்டத்தின் மூத்த ரயில்வே அதிகாரிகள்,ஊழியா்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். விழாவின் போது 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் சிறப்பான சேவைகளுக்காக பாரட்டப்பட்டனா் என்றாா் பிரேம் ஷங்கா் ஜா.
தொடர்புடையது

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!

ஹாலிவுட்டில் இருந்து விலகும் ஆஸ்கர்ஸ்!

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!
பிசிசிஐ நமன் விருதுகள் 2026: சிறந்த வீரா் கில்; வீராங்கனை ஸ்மிருதி!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

