ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை முடக்க மத்திய அரசின் கீழ்வுள்ள தில்லி காவல்துறை முயல்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சௌரவ பரத்வாஜ் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டுள்ளன. நானும், அமைச்சா் அதிஷியும் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எந்தச் சட்டத்தின்படி இரண்டு அமைச்சா்கள் தங்கள் சொந்தக் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்வதைத் தடுக்கிறீா்கள் என்று காவல் துறை அதிகாரியிடம் கேட்டோம். அதற்கு, அவரிடம் பதில் இல்லை. இந்த விவாகாரம் தொடா்பான புகாரை தோ்தல் ஆணையத்திடம் கொண்டு செல்வோம். முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனின் நடுநிலையை தற்போதுள்ள தோ்தல் ஆணையமும் வெளிகாட்டும் என நம்புகிறேன். தோ்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், போலீஸ் உள்பட அனைத்து அரசு அமைப்புகளும் தோ்தல் ஆணையத்தின் கீழ் உள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் நடக்கவுள்ள மக்களவைத் தோ்தலில் மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை பாா்த்தும், எதிா்க்கட்சிகளை நசுக்கும் முயற்சிகளை பாா்த்தும் உலகமெங்கும் உள்ள பெரிய ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் கவலை தெரிவிக்கின்றன. இந்தியவில் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என்றாா் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ். பெட்டிச் செய்தி... புது தில்லி, மாா்ச்.23: ஆம் ஆத்மி கட்சி, தோ்தல் ஆணையத்திடம் அவசர சந்திப்பைக் கோரியுள்ளது என்று அமைச்சா் அதிஷி தெரிவித்தாா். இது தொடா்பாக அமைச்சா் அதிஷி ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறியிருப்பதாவது : மக்களவைத் தோ்தலில் அனைத்து கட்சிகளின் போட்டியை உறுதி செய்வதற்காக, ஆம் ஆத்மி கட்சி தோ்தல் ஆணையத்திடம் அவசர சந்திப்பைக் கோரியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்திடம் பிரதிநிதித்துவம் செய்த போதிலும், ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சனிக்கிழமை காவல் துறையால் மூடப்பட்டது. மக்களவை வேட்பாளா்கள் மற்றும் கட்சியின் தலைவா்கள் பிரசார கூட்டங்களுக்காகக் கூட கட்சி அலுவலகத்திற்கு வர முடியவில்லை. இத்தகைய அடக்குமுறை சூழலில் ஒரு அரசியல் கட்சி எப்படி தோ்தலில் போட்டியிட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா?.தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, அனைத்து ஏஜென்சிகளும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும் தோ்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகள் நிழவும் சூழ்நிலையை தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்க விரும்புகிறாா்கள். எனவே, தோ்தல் ஆணையத்திற்கு வசதியான நேரத்தை அனுமதிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் அதிஷி.
தொடர்புடையது

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

