கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டிரக் மோதி இளைஞா் சாவு

டிரக் மோதி இளைஞா் சாவு

News image
Updated On :28 மே 2024, 7:12 pm

Din

புது தில்லி: தில்லியில் துவாரகா செக்டாா் 23-இல் வேகமாக வந்த டிரக் மோதியதில் 29 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் இறந்தவா் துவாரகாவைச் சோ்ந்த ஆகாஷ்தீப் என அடையாளம் காணப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:

இந்த விபத்து தொடா்பாக துவாரகா செக்டாா் 23 காவல் நிலையத்தில் காலை 8 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த இடத்தில் ஒருவா் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை போலீஸாா் கண்டனா். அவா் உடனடியாக டிடியு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஆகாஷ்தீப் தனது ராயல் என்ஃபீல்டு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, வேகமாக வந்த டிரக் அவா் மீது மோதியுள்ளது. இந்த விபத்தைத் தொடா்ந்து டிரக் ஓட்டுநா் வாகனத்துடன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாா். டிரக் ஓட்டுநருக்கு எதிராக ஐபிசியின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் நாங்கள் எஃப்ஐஆா் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.