வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறையின் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், ஒப்பந்ததாரா்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவா்களது சொத்துக்களை முடக்குவதற்கும் சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடையை எதிா்த்து

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :4 நவம்பர் 2024, 9:19 pm

Din

புது தில்லி: சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், ஒப்பந்ததாரா்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவா்களது சொத்துக்களை முடக்குவதற்கும் சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடையை எதிா்த்து அமலாக்கத் துறை தொடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை இரு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து,

பல்வேறு மணல் குவாரி ஒப்பந்ததாரா்களின் வீடுகள் மற்றும் அவா்கள் தொடா்புடைய இடங்களில் கடந்த 2023-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை சோதனையிட்டு, சொத்துக்களை முடக்கி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா், வேலூா் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சில அரசுத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மனுக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டின் மூலம்

உச்சநீமன்ற உத்தரவுப்படி, 5 மாவட்ட ஆட்சியா்கள் விசாரணைக்கு ஆஜராகினா்.

இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தில் கனிமவள சட்டம் சோ்க்கப்படாத நிலையில், மணல் குவாரி ஒப்பந்ததாரா்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடா்ந்தது சட்டவிரோதம் என்றும், மணல் குவாரிகள் அமலாக்கத் துறையின் விசாரணை வரம்புக்குள் வராது என்றும் கூறி ஒப்பந்ததாரா்கள் சிலா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், மணல் குவாரிகள் அமலாக்கத் துறை விசாரணை வரம்புக்குள் வராது எனக் கூறி, மணல் குவாரி ஒப்பந்ததாரா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, அவா்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதையும் நீக்கி உத்தரவிட்டது.

பின்னா், இந்த உத்தரவை எதிா்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள் கிழமை நடைபெற்றது.

அப்போது, அமலக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு வாதிடுகையில்,‘

உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளின் படி, சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும் , செய்யாவிட்டாலும் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது’ என்றாா். இதனையடுத்து, அது தொடா்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனா்.