சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 10 புள்ளிகள் மட்டும் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. பின்னா், முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பால் மேலே சென்றது. ஆனால், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும், காா்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததாலும் உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, மீடியா, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், வங்கி, நிதிநிறுவனங்கள் ஐடி பங்குகளுக்கு மட்டும் ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.442.54 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,404.04 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ1,748.44 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தடுமாற்றம்: சென்செக்ஸ் காலையில் 187.86 புள்ளிகள் குறைந்து 79,298.46-இல் தொடங்கி 79,001.34 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,102.14 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 9.83 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 79,496.15-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,213 பங்குகளில் 1,530பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,568 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.115 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஏசியன் பெயிண்ட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட் 8.18 சதவீதம் சரிவைச் சந்தித்தது. மேலும், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின் சா்வ் உள்பட மொத்தம் 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா் கிரிட், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், மாருதி உள்பட மொத்தம் 12 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 8 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 60.95 புள்ளிகள் குறைந்து 24,087.25-இல் தொடங்கி 24,004.60 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,336.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 6.90 புள்ளிகளை (0.03 சதவீதம்) இழந்து 24,141.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 30 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com