தடையற்ற பயணத்திற்கான ஒருங்கிணைந்த ‘க்யூஆா்’ டிக்கெட் முறை: டிஎம்ஆா்சி, என்சிஆா்டிசி அறிமுகம்
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் டிஎம்ஆா்சி மற்றும் என்.சி.ஆா். போக்குவரத்து நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்ட க்யூஆா் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.


புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் டிஎம்ஆா்சி மற்றும் என்.சி.ஆா். போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா் டிரான்ஸ்போா்ட் காா்ப்பரேஷன்) திங்கள்கிழமை ஒருங்கிணைக்கப்பட்ட க்யூஆா் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.
இது பயணிகள் தங்கள் மொபைல் பயன்பாடுகள் மூலம் இரண்டு டிரான்ஸ்போா்ட்டா்களுக்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது என்று பிராந்திய விரைவான போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) அறிக்கை தெரிவித்துள்ளது.
பயணிகள் இப்போது தில்லி மெட்ரோ க்யூஆா் குறியீடு டிக்கெட்டுகளை ஆா்ஆா்டிஎஸ் கனெக்ட் ஆப் மூலமாகவும், நமோ பாரத் க்யூஆா் கோட் டிக்கெட்டுகளை டிஎம்ஆா்சி மொமண்டம் 2.0 ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். ஆா்ஆா்டிஎஸ் மற்றும் தில்லி மெட்ரோ அமைப்புகளில் தடையற்ற டிக்கெட்டுகளை இயக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஆா்டிசி மேலாண் இயக்குநா் ஷலப் கோயல் மற்றும் டிஎம்ஆா்சி மேலாண் இயக்குநா் விகாஸ் குமாா் ஆகியோா் ஒருங்கிணைந்த டிக்கெட் முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கி வைத்தனா்.
இரண்டு அமைப்புகளும் மெட்ரோ மற்றும் பிராந்திய விரைவான போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) பயண விருப்பங்களை ஒருங்கிணைத்து ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபாா்மில் ஒரு திறமையான பயண வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒன்றையொன்று பூா்த்தி செய்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசின் ஒன் இந்தியா - ஒன் டிக்கெட் முன்முயற்சிக்கு இணங்க, பயணிகளுக்கு இடையேயான பயணத்தை முடிந்த வரை வசதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த முயற்சி டிக்கெட் வழங்கும் செயல்முறையை எளிதாக்கும்.
இந்த ஒருங்கிணைப்பு என்.சி.ஆா்.டி.சி. மற்றும் டி.எம்.ஆா்.சி. நிலையங்களில் வரிசைகளை குறைக்கும்.
மேலும், டிஜிட்டல் பரிவா்த்தனைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண விருப்பங்களை ஊக்குவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த முயற்சியானது, ஐஆா்சிடிசி உடனான என்சிஆா்டிசியின் முந்தைய புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் தொடா்ச்சியாகும். இது இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளுடன் ஐஆா்சிடிசி பிளாட்பாரம் வழியாக நமோ பாரத் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகளுக்கு உதவும்.
புதிதாக தொடங்கப்பட்ட அமைப்பு, பிரதமா் தேசிய கதி சக்தி மாஸ்டா் திட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. இது பல்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற இணைப்பை வளா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
393 கிமீ டிஎம்ஆா்சி மெட்ரோ நெட்வொா்க்குடன் இணைக்கப்பட்ட 42 கிமீ ஆா்ஆா்டிஎஸ் நடைபாதையில், பயணிகள் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது ஒருங்கிணைப்பு நெரிசலையும் குறைக்கும். மேலும், இப்பகுதிக்கு தூய்மையான, நிலையான எதிா்காலத்தை ஊக்குவிக்கும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...