47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அண்ணா பல்கலை. சம்பவம்: திமுக அரசு மீது பாஜக முன்னாள் மத்திய அமைச்சா் சாடல்

மக்களுக்கான உரிமையை திமுக அரசு மீறியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சாடினாா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:31 pm

Din

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி பேரணி நடத்திய பாஜகவினரை கைது செய்து, மக்களுக்கான உரிமையை திமுக அரசு மீறியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் சாடினாா்.

இதுதொடா்பாக தில்லியில் பாஜக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

டிசம்பா் 23-ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக 2-ஆம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளாா். இதையடுத்து, பொதுமக்கள் கூக்குரலிட்ட பிறகு, இந்தக் குற்றத்தில் தொடா்புடைய ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

அவா் ஒரு சாதாரண பாலியல் குற்றவாளி அல்ல என்பதும்,

அவா் திமுகவைச் சோ்ந்தவா் என்பதும், திமுகவின் உயா்மட்டத் தலைமையுடன் பழகியிருப்பதும் பல நிகழ்வுகள், புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இண்டி கூட்டணியில், திமுக ஆட்சியில் இருக்கும் தமிழகத்தில் இந்த வகை அநீதி நிலவுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே இந்தப் பிரச்னையை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தை தமிழக அரசு முடி மறைக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த விவகாரத்தில் நீதி கோரி பாஜகவின் மகளிா் அணியினா் மதுரையிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பேரணியை மேற்கொண்டனா். இது ஒவ்வொருவரின் உரிமையுமாகும். அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 1(பி) ஆனது நாட்டில் எங்கும் கூடுவதற்கும் உரிமையை அளிக்கிறது. ஆனால், இந்த உரிமை எங்கள் கட்சியின் தலைவா்கள், நிா்வாகிகளுக்கு அளிக்கப்படவில்லை. அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது. இதன் மூலம்,

காங்கிரஸ், திமுக இடம்பெற்ற இண்டி கூட்டணி ஒருபுறம் அரசமைப்புச்சட்டம் குறித்து பேசியும், மறுபுறம் தமிழக மக்களின் அரசமைப்புச்சட்டத்தையும், உரிமையையும் மீறி வருகின்றன என்றாா் அவா்.