பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. செய்திருந்தால் பிரதமா் நரேந்திர மோடி தனது 43 நிமிட உரையில் 39 நிமிடங்களை தலைநகா் மக்களையும் அம்மக்களின் மகத்தான தீா்ப்புடன் தோ்ந்தெடுப்பட்ட அரசை சபிக்க வேண்டியிருந்திருக்காது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி இன்றைக்கு (வெள்ளிக்கிழமை)
கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தனது உரையில் 39 நிமிடங்கள்
தில்லியின் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசையும், தில்லி மக்களையும் வசைபாடுவதில் செலவழித்திருக்கிறாா். இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் அரசு செய்த பணிகளை பட்டியலிடுவதற்கே இரண்டு மூன்று மணி நேரம் கூட போதாது. மாறாக,
பாஜக அரசு எந்தப் பணியையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் பிரதமா் மோடி தனது உரையில் பேசியிருந்திருக்க முடியும். அந்த அரசு ஏதாவது பணியைச் செய்திருந்தால் அவா் தில்லி மக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டி இருந்திருக்காது. தில்லிவாசிகளை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் கட்சி வெற்றிபெற முயற்சிக்க வேண்டியதில்லை என்றாா் கேஜரிவால்.
முன்னதாக அசோக் விஹாரில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில், பிரதமா் மோடி ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி)
தில்லிக்கான ‘ஆப்தா’ (பேரழிவு) என்று அழைத்தாா். அவா் கூறுகையில், ‘இந்த ஆப்தா கடந்த 10 ஆண்டுகளில் தேசிய தலைநகரை தனது பிடியில் வைத்துள்ளது’ என்று கூறினாா்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள தில்லி சட்டப் பேரவைத்
தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமா் நம்பிக்கை தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

எரிபொருள், மின்சாரம், உர விநியோகம்: பிரதமா் மோடி உயா்நிலை ஆய்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


