எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சா் கிஷன் ரெட்டி இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: பிரதமா் மோடி பங்கேற்பு

மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 9:26 pm

Din

புது தில்லி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

இது குறித்து பிரதமா் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘எனது அமைச்சரவை சகாவான ஜி கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாசார நிகழ்வையும் கண்டுகளித்தேன்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனா்.

நமது கலாசாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.

சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடைப் பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.