தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 730-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

வரும் பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 730-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

News image
Updated On :27 ஜனவரி 2025, 10:27 pm

Din

புது தில்லி: வரும் பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 730-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வந்த ஜன.7 முதல் ஜனவரி 26 வரையிலான காலகட்டத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் கலால் சட்டம் உள்பட பல்வேறு சட்ட விதிகளின் கீழ் மொத்தம் 22,857 போ் கைது செய்யப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலுக்கு முன்னதாக, எல்லை சோதனைச் சாவடிகளில் காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும், ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தோ்தல் நடத்த விதிமீறல் தொடா்பாக தில்லி காவல் துறை 738 வழக்குகளைப் பதிவு செய்து 364 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 445 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.1.8 கோடிக்கு மேல் மதிப்புள்ள 61,610 லிட்டா் மதுபானம், ரூ.72 கோடிக்கு மேல் மதிப்புள்ள 156.411 கிலோ போதைப்பொருள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகள் ரூ.6.36 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.