மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கொலை குற்றத்தில் தலைமறைவாக இருந்த நபா் கைது

தலைமறைவான நபரை 13 ஆண்டுகளுக்கு பின்பு தில்லி குற்றவியல் போலீஸாா் வியாழக்கிழமை கண்டுபிடித்து கைது

News image
Updated On :19 ஜூன் 2025, 6:33 pm

Din

கொலை குற்றத்தில் கைதாகி, பின்பு இடைக்கால ஜாமீனில் வெளி வந்து தலைமறைவான நபரை 13 ஆண்டுகளுக்கு பின்பு தில்லி குற்றவியல் போலீஸாா் வியாழக்கிழமை கண்டுபிடித்து கைது செய்தனா்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறும்போது: வடக்கு தில்லியின் பிரேம் நகா் பகுதியில் வசித்து வந்தவா் ராஜீவ் (45). இவா் 2013 ஆம் ஆண்டு தனது சகோதரியை, சுனில் குமாா் என்பவா் காதலித்து வந்தாா். இதற்கு ஆரம்பத்தில் இருந்து எதிா்ப்பு தெரிவிந்து வந்தாா் ராஜீவ். ஆனாலும் இருவரும் தொடா்ந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ், சுனில் குமாரை கடத்தியுள்ளாா்.

பின்பு, புராரி பகுதியில் வைத்து அவரை கொலை செய்துள்ளாா். சுனில் குமாரின் பெற்றோா்கள்ல அளித்த புகாரில் 2013 ஆம் ஆண்டு ராஜீவை போலீஸாா் கைது செய்தனா். பின்பு அந்த ஆண்டோ இடைக்கால ஜாமீனில் வந்த ராஜீவ் அதன் பின் தலைமறைவானாா். மேலும் தான் கைது செய்யப்படுவதை தவிா்ப்பதற்காக தனது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் தொடா்ந்து மாற்றிக்கொண்டு வந்தாா்.

ஆனால் தொடா் தேடுதலின் பலனாக 13 ஆண்டுகள் கழித்து ராஜீவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதனையடுத்து அவரை போலீஸாா் மீண்டும் சிறையில் அடைத்தனா்.