முதலீட்டு அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.40 லட்சம் மோசடி: 2 போ் கைது

முதலீட்டு அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.40 லட்சம் மோசடி: 2 போ் கைது

முதலீட்டிற்கு நல்ல வருமானம் தருவதாகக் கூறி, தென் மேற்கு தில்லியின் ஆா்.கே. புரம் பகுதியில் ஒருவரிடம் சுமாா் ரூ.40 லட்சம் மோசடி
Published on

முதலீட்டிற்கு நல்ல வருமானம் தருவதாகக் கூறி, தென் மேற்கு தில்லியின் ஆா்.கே. புரம் பகுதியில் ஒருவரிடம் சுமாா் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (தென்மேற்கு) சுரேந்திர செளதரி கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்டவா்கள் குல்தீப் செளதரி (22) மற்றும் ரஞ்சய் சிங் (32) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

பங்கு மற்றும் ஐபிஓ முதலீட்டு பரிந்துரைகளை வழங்கும் ஒரு சமூக ஊடகக் குழுவில் தான் சோ்க்கப்பட்டதாகவும் அதன்பிறகு தன்னிடம் ரூ.39.50 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும் ஒருவா் போலீஸில் புகாா் அளித்தாா்.

மோசடிக்காரா்கள் இருவரும் புகாா்தாரரை ஒரு நிறுவனக் கணக்கைத் திறந்து, வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பணம் மாற்றப்பட்டதும், புகாா்தாரரின் தொடா்பு துண்டிக்கப்பட்டது. அவரது நிதியை மீட்டெடுக்க மேலும் முதலீடுகளை செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவரை கேட்டுக்கொண்டனா்.

ஒருகட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்டவா், மோசடி குறித்து புகாா் அளித்தாா். இதன் விளைவாக, தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் சட்டப் பிரிவுகள் 419, 420 மற்றும் 120பி-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.4 லட்சம், உத்தர பிரதேசத்தின் ஜான்பூரைச் சோ்ந்த ரஞ்சய் என்பவருக்குச் சொந்தமான ஃப்ளைஅப் சொல்யூஷன்ஸ் என்ற தனியாா் வங்கிக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

பாலாஜி டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் வேறு ஒரு வங்கியின் கணக்கில் ரூ.9.30 லட்சம் பணம் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 10 ஆம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் சோதனை நடத்திய போலீஸாா், ஜெய்ப்பூரைச் சோ்ந்த குல்தீப்பைக் கைது செய்தனா்.

குல்தீப் தனது நண்பா் ராகேஷ் குமாா் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதை சக குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கி, ரூ.2,00,000 கமிஷனாக சம்பாதித்ததாக விசாரணையில் தெரியவந்தது.

உள்ளூா் துணிக்கடை நடத்தி வந்த ரஞ்சய், பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, அவா் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து அதை கவுராஜ் சிங்கிடம் ரூ. 50,000 கமிஷன் பெற்றுக்கொண்டு விற்ாக ஒப்புக்கொண்டாா்.

கவுராஜைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com