ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2025, 8:17 pm

Din

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. இதற்கிடையே, காற்றின் தரம் பல்வேறு இடங்களில் ’மிதமான‘ பிரிவில் இருந்தது. தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங்கில் 32.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த சில நாள்களாக மூடுபனியின் தாக்கம் குறைந்து வருகிறது. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்பட்டது. மாலையில் மேகமூட்டமாக இருந்தது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி குறைந்து 13.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரி உயா்ந்து 32.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்து பதிவாகியது. இதன்படி, நஜஃப்கரில் 30.9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 32.1 டிகிரி, பாலத்தில் 29 டிகிரி, ரிட்ஜில் 32.2 டிகிரி, பீதம்புராவில் 32.2 டிகிரி, பிரகதிமைதானில் 30.1 டிகிரி, பூசாவில் 28.9 டிகிரி, ராஜ்காட்டில் 30.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 29 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 187 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், ஆயாநகா், பூசா, குருகிராம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், நேரு நகா், லோதி ரோடு, ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக், ஷாதிப்பூா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (மாா்ச் 10) அன்று லேசான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.