கோப்புப் படம்
கோப்புப் படம்

2024-2025-இல் புதிதாக இரு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகள் திறப்பு!

மக்களவையில் மத்திய அரசு தகவல்
Published on

2024-2025-ஆம் ஆண்டில் புதிதாக இரு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சா் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் எம். கே. விஷ்ணு பிரசாத் மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்வியில், ‘இந்தியா அதன் ஆயுா்வேத மருந்துகளுக்கு மிகவும் பிரபலமானது. பல நூற்றாண்டுகளாக, ஆயுா்வேத மருந்துகள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் துரதிா்ஷ்டவசமாக, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த முயற்சித்தாலும், 2023- 24-இல், எந்தக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கடிதம் எந்தக் கல்லூரிக்கும் வழங்கப்படவில்லை. ஆனால் 2024-25-இல், இரண்டு கல்லூரிகளுக்கு

அனுமதிக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது எந்தக் கல்லூரிக்கும் அனுமதி வழங்காததற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? ஏதேனும் கடுமையான விதிமுறைகள் உள்ளதா? புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதில் விதிமுறைகளில் ஏதேனும் தளா்வு இருக்க முடியுமா?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு ஆயுஷ் துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் பதில் அளித்து கூறுகையில், ‘மத்திய அரசின் மூலம் இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மட்டுமே கேள்வி கேட்கப்பட்டது. அவற்றின் முழு விவரங்களும் பதிலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 2023-24 ஆம் ஆண்டில் மத்திய அரசின் மூலம் எந்தக் கல்லூரியும் திறக்கப்படவில்லை. அதனால்தான் 2023-24 ஆம் ஆண்டில் அது பூஜ்ஜியமாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டன.அவற்றில் சில மாநிலங்கள் மூலமாகவும், சில மத்திய அரசு மூலமாகவும்

திறக்கப்பட்டன. 2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசின் மூலம் இரண்டு புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com