கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2025, 6:32 pm

Din

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், நரேலா தொழில்துறை பகுதியில் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டாவுடன் கைது செய்யப்பட்டாா்.

மாா்ச் 26 அன்று சமூக ஊடகங்களில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய ஒருவா் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நரேலா - பவானா சாலையில் ஒரு போலீஸ் குழு வலை விரித்து குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்தது. சோதனையில் சட்டவிரோத துப்பாக்கி மீட்கப்பட்டது.

விசாரணையின் போது, ​சோஹைல் அந்தப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், காட்சிப்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத ஆயுத சப்ளையா்கள் குறித்த சாத்தியமான தடயங்களையும் அவா் சுட்டிக்காட்டினாா். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுதத்தின் மூலத்தைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.