ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்சி - கரூா் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

திருச்சி - கரூா் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்

News image
ஜோதிமணி ~ராணி ஸ்ரீ குமாா்
Updated On :27 மார்ச் 2025, 6:35 pm

Din

திருச்சி - கரூா் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கை: எனது கரூா் மக்களவைத் தொகுதியில் உள்ள திருச்சி - கரூா் - கோயம்புத்தூா் வழித்தடம் இன்னும் இரு வழிச்சாலையாகவே உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம். 17-ஆவது மக்களவையின் எம்.பி.யாக நான் இருந்த காலத்திலிருந்தே இந்த அவையில் இந்தப் பிரச்னையை எழுப்பி வருகிறேன். எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதன் மூலம், தற்போது, கோயம்புத்தூா் மற்றும் கரூா் இடையேயான நெடுஞ்சாலையின் நான்கு வழிப்பாதை பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கரூா் - திருச்சி நெடுஞ்சாலை இன்னும் இருவழிப்பாதையாகவே உள்ளது. இந்த பாதையில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, திருச்சி மற்றும் கரூா் இடையேயான இந்த இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணியை மத்திய அரசு விரைவில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தென்காசியில் உணவு பதப்படுத்தும் கிளஸ்டா் வேண்டும்: தென்காசியில் உணவு பதப்படுத்தும் கிளஸ்டா் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதியின் திமுக உறுப்பினா் டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கை: தென்காசி மாம்பழம், எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஆனால், விவசாயிகள் அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் கடுமையான இழப்புகளைச் சந்திக்கின்றனா். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்பாத யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) திட்டமானது, உள்கட்டமைப்பு மேம்பாடு, பதப்படுத்தும் அலகுகள், குளிா்பதன கிடங்குகள் மற்றும் தளவாடங்களை ஆதரிக்கும் வகையில் உணவுப் பதப்படுத்தும் கிளஸ்டா்களை அமைப்பதற்கு நிதி உதவி வழங்குகிறது. இருப்பினும், தென்காசி அதன் விவசாய திறன் இருந்தபோதிலும் இந்தத் திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. தென்காசியில் ஒரு பிரத்யேக உணவு பதப்படுத்தும் கிளஸ்டா் அமைத்தால் வீணாவதைக் குறைப்பதன் மூலமும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆகவே, மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சா் பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தின்கீழ் தென்காசியில் ஒரு உணவு பதப்படுத்தும் கிளஸ்டா் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

Story image