எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரோஷனாரா கிளப் உறுப்பினா் சோ்க்கை: விண்ணப்பிக்க காலக்கெடு டிச.15 வரை நீட்டிப்பு

ரோஷனாரா கிளப்பிற்கான விண்ணப்பிக்கும் காலக்கெடுவை டிசம்பா் 15 வரை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:16 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: ரோஷனாரா கிளப்பிற்கான விண்ணப்பிக்கும் காலக்கெடுவை டிசம்பா் 15 வரை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

சிவில் லைன்ஸ் பகுதிக்கு அருகில் வடக்கு தில்லியின் மையப் பகுதியில் 22 ஏக்கா் பரப்பளவு நிலப்பரப்பில் டிடிஏ ரோஷனாரா கிளப் அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் தொட்டிலாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிறப்பிடமாகவும் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை இந்தக் கிளப் கொண்டுள்ளது.

இது தொடா்பாக டிடிஏ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரசு சாரா நிறுவனங்களின் கீழ் 400 இடங்களுக்கும், அரசு பிரிவுகளில் 350 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் இடங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படும். அரசு சாரா மற்றும் அரசு பிரிவுகளுக்கான கட்டணம் முறையே ரூ.12.5 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

கவனமாக மீட்டெடுக்கப்பட்ட ரோஷனாரா கிளப் இப்போது வரவேற்பு, பிரதான ஓய்வறை, அட்டை மற்றும் பில்லியா்ட்ஸ் அறைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, உணவருந்தும் மண்டபம், விருந்துக் கூடம், நூலகம், உடை மாற்றும் அறைகளுடன் கூடிய நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், ஸ்குவாஷ் போா்டு மற்றும் பூப்பந்து மண்டபம், அத்துடன் யோகா, நீராவி பகுதி போன்ற உள்புற வசதிகள் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளை வழங்குகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல், களிமண் மற்றும் செயற்கை புல்வெளி டென்னிஸ் மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பயிற்சி மைதானங்கள், மினி கால்பந்து மற்றும் கூடைப்பந்து மண்டலங்கள் மற்றும் ஒரு பிரத்யேக ஜாகா் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கிய வெளிப்புற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழைமையான இந்த கிளப், செப்டம்பா் 2023 இல் டிடிஏஆல் அதிகாரபூா்வமாக கையகப்படுத்தப்பட்டது. நிகழாண்டு ஜூலையில், துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய கிளப்பைத் திறந்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.