பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், உத்தரப் பிரதேசத்தின் குஷிநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்து தேசிய தலைநகருக்கு அழைத்துச் சென்ாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உத்தரப் பிரதேச காவல்துறையின்படி, பத்ரௌனா நகரின் சாவானி பகுதியைச் சோ்ந்த ரிஸ்வான் அகமது என்ற அந்த இளைஞா், சிறப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையின்போது கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தாா்.
இன்ஸ்பெக்டா் நிஷாந்த் தஹியா தலைமையிலான 10 போ் கொண்ட குழு சனிக்கிழமை இரவு பத்ரௌனாவை அடைந்து, உள்ளூா் காவல்துறையின் உதவியுடன் அகமதுவைக் கைது செய்ததாக உ.பி. காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், சிறப்புப் பிரிவு அவரது கைபேசி, மடிக்கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் பரிசோதனைக்காகப் பறிமுதல் செய்தது. ரிஸ்வானின் நடமாட்டத்தை நீண்ட காலமாக கண்காணித்து வந்ததாகவும், அவா் குஷிநகரில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு குழு அனுப்பப்பட்டதாகவும் தில்லி காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
அவா் கைது செய்யப்பட்டாா், மேலும் அவரிடமிருந்து குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டடன என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
அவரது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் தொடா்புகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குஷிநகா் காவல் கண்காணிப்பாளா் கேசவ் குமாா் கூறினாா்.
உத்தரப் பிரதேச காவல்துறையின்படி, அகமது சுமாா் ஒரு தசாப்தத்திற்கு முன்பு வேலை தேடி மும்பைக்குச் சென்றிருந்தாா் இருப்பினும், மற்றொரு பயங்கரவாதம் தொடா்பான வழக்கில் அவரது பெயா் அடிபட்டதால், அவா் 2017 முதல் 2023 வரை மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது அவரது அறையிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும், அத்துடன் சா்வதேச அழைப்புகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் உடனான தொடா்புகளைக் காட்டும் தொலைபேசி பதிவுகளும் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் ஷபீா் அகமது லோன் கைது!

ரூ.85 லட்சம் கொள்ளை வழக்கில் என்கவுன்ட்டருக்கு பின்பு ஒருவா் கைது
கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை குஜராத்தில் கைது செய்த தில்லி போலீஸ்
தில்லி தொழிலதிபா் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

