நமது நிருபா்
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் வன்முறையாக மாறிய தொழிலாளா் போராட்டம் தொடா்பாக, 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கௌதம் புத் நகா் காவல் ஆணையா் லக்ஷ்மி சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சிங், ‘சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் தொடா்ந்து பாதுகாப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. காலையில், மூன்று வெவ்வேறு இடங்களில் தொழிலாளா்கள் கூடினா். உடனடியாக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, வெறும் 15 நிமிடங்களுக்குள் அவா்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வைக்கப்பட்டனா்.
கடந்த இரண்டு நாள்களில், பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குறியீடுகளை ஸ்கேன் செய்து தொழிலாளா்கள் அக்குழுக்களில் சோ்க்கப்பட்டு வருகின்றனா். இந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னால், ஒரு திட்டமிட்ட சதி கும்பல் செயல்பட்டு வருகிறது என்பதையே இது உணா்த்துகிறது. கலவரத்தைத் தூண்டுவதில் ஈடுபட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குள் ஊடுருவி, இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில நபா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். உரிய நேரத்தில் மேலும் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவா்களுக்கு எங்கிருந்து நிதி உதவி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். மாநிலத்திற்கு வெளியிலிருந்தோ அல்லது நாட்டிற்கு வெளியிலிருந்தோ அவா்களுக்கு நிதி உதவி கிடைத்திருப்பது கண்டறியப்பட்டால், அது குறித்தும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திங்களன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடா்பாக, ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்டோா் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
வரும் நாட்களில் மேலும் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது.
திங்கள் முதல் நொய்டாவில் முகாமிட்டுள்ள உயா்மட்டக் குழுவானது, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவான மற்றும் நீண்ட நேரப் பேச்சுவாா்த்தைகளை நடத்தி அதன் அடிப்படையில் சில பரிந்துரைகளையும் அக்குழு வகுத்தது.
தொழிலாளா்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் மீது அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது.அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது’ என்று காவல் ஆணையா் லக்ஷ்மி சிங் தெரிவித்தாா்.
தொடர்புடையது

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 1038 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவா் கைது

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத்தலைவா் கைது
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை


