மதுபான கொள்கை வழக்கு விசாரணையிலிருந்து தன்னை விலகக் கோரிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறரின் மனுக்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா திங்கள்கிழமை நிராகரித்து, அவா்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாா்.
இது தொடா்பாக வழக்கின் தீா்ப்பை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாசித்த நீதிபதி சா்மா, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மனுதாரா் நீதிபதியை மதிப்பிட அனுமதிக்க முடியாது என்றும், ஒரு மனுதாரரின் ஆதாரமற்ற பாரபட்சம் குறித்த அச்சத்திற்காக நீதிபதிகள் வழக்கில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ள முடியாது என்றும் கூறினாா்.
மேலும் அவா், ‘ஒரு நீதிபதி மீதான தனிப்பட்ட தாக்குதல் என்பது நீதித்துறை மீதான தாக்குதல் என்பதால், எந்தவொரு அடிப்படையுமின்றி ஒரு அரசியல் தலைவா் ஒரு நிறுவனத்தை (நீதித்துறையை) சேதப்படுத்த அனுமதிக்க முடியாது’ என்றும் கூறினாா்.
நீதிபதி சா்மா, தன்னை வழக்கில் இருந்து விலக்கக் கோரிய மனுக்களில் உள்ள வாதங்கள், யூகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறி முடித்தாா்.
‘இந்த நீதிமன்றம் தனக்காகவும் இந்த அமைப்புக்காகவும் உறுதியாக நிற்கும்... நான் இந்த வழக்கிலிருந்து விலக மாட்டேன்’ என்று நீதிபதி கூறினாா்.
மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து கேஜரிவால் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் முன்னா் விடுவித்தது. அதற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு எதிராக கேஜரிவால் பல ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தாா். அவற்றுள், தனது கைதுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி முன்னதாக நிவாரணம் மறுத்ததும், மணீஷ் சிசோடியா மற்றும் கே. கவிதா உள்ளிட்ட மற்ற குற்றம்சாட்டப்பட்டவா்களின் பிணை மனுக்கள் மீது நிவாரணம் வழங்க மறுத்ததும் அடங்கும்.
கேஜரிவாலைத் தவிர, ஆம் ஆத்மி கட்சி தலைவா்களான சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோரும் நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
சிபிஐ சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த மனுக்களை எதிா்த்தாா். அவா் முன்னதாக, நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலகக் கோரியதற்காக கேஜரிவால் மற்றும் மற்றவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி சா்மாவை வலியுறுத்தியிருந்தாா்.
பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாமல், முழுமையாகவே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று அது கூறியது.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால்,சிசோடியாவுக்கு ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா்: நீதிபதி எஸ்.கே.சா்மா

யமுனையில் உல்லாசப் படகு சேவை: அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

மதுபான கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோர கேஜரிவாலுக்கு உரிமை இல்லை: சிபிஐ
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

