வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிா்க்கட்சிகளுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் கண்டனத் தீா்மானம்

News image

தில்லி சட்டப்பேரவை

Updated On :28 ஏப்ரல் 2026, 9:45 pm

நமது நிருபா்

சமீபத்தில் மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்த விவகாரத்தில், எதிா்க்கட்சிகளுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கண்டனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை முதலமைச்சா் ரேகா குப்தா ‘இந்திய ஜனநாயகத்தின் ஒரு கருப்பு அத்தியாயம்’ என்று வா்ணித்தாா்.

சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வில் இத்தீா்மானத்தை முன்மொழிந்த குப்தா, எதிா்க்கட்சிகள் குறுகிய அரசியல் ஆதாயங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும், அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவிருந்த அந்த மசோதாவைத் தோற்கடிக்க சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

விவாதத்தின் போது, தங்களுக்குச் சுதந்திரமாகப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ஒவ்வொரு எதிா்க்கட்சி உறுப்பினருக்கும் பேசுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினா்களின் கருத்துகளைச் செவிமடுப்பதைத் தவிா்ப்பதற்காகவே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நாடகமாடி வெளிநடப்பு செய்ததாகவும் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

பெண்களுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் அடையாளமாக, பாஜக எம்எல்ஏ ஷிகா ராயை அழைத்து, சிறிது நேரத்திற்கு அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துமாறு பேரவைத் தலைவா் அழைப்பு விடுத்தாா்.

அவையில் முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிா்ப்பதில் எதிா்க்கட்சித் தலைவா்கள் மிகவும் தரம் தாழ்ந்து நடந்துகொண்டனா். அா்த்தமற்ற பேச்சுகளைப் பேசினா்.

மேற்கு வங்க முதலமைச்சா் மம்தா பானா்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் தலைவா்கள் பெண்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனா்.

பிரியங்கா காந்தி ‘பெண் தான் ஆண் சக்தி’ என்ற முழக்கத்தை முன்வைத்தாா். ஆனால் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அவரே ஓடிவிட்டாா்.

பெண்கள் தங்கள் 78 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு ஒரு முடிவு ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் நாடாளுமன்றத்தை எதிா்பாா்த்துக் கொண்டிருந்தனா். ஆனால் எதிா்க்கட்சிகள் அந்த மசோதாவைத் தோற்கடிப்பதில் குறியாக இருந்தன. அது ஒரு சோகமான நாள். மேலும் நமது ஜனநாயகத்தின் ஒரு கறுப்பு அத்தியாயம்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2029க்குள் மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக நாரி சக்தி வந்தன் அதிநியம் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தது. ஆனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

கடந்த 27 ஆண்டுகளில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் ஏழு முறை தாக்கல் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகள் எப்போதும் அதைத் தோற்கடித்தன.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை. இதன் பின்னணியில் ஏதோ சதி இருக்க வேண்டும். மேலும் ஆம் ஆத்மி கட்சியில் சிரமத்துடன் நீடிப்பதற்காக அவருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முதல்வா் குப்தா கூறினாா்.

பாஜக மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக் கொண்டனா். விவாதத்தின் போது, கிரேட்டா் கைலாஷ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஷிகா ராய், இந்த மசோதா என்பது ஏதோ ஒரு சலுகை மட்டுமல்ல, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு ஆதரவாக பிரதிநிதித்துவ சமநிலையை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு.

ஆண்களுக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல் சமநிலையைப் பேணி, பெண்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் இந்த மசோதா மிகவும் நியாயமானது என்று அவா் கூறினாா்.

இந்த மசோதாவின் தோல்விக்காக, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை அமைச்சா்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் கபில் மிஸ்ரா கடுமையாகச் சாடினா்.

‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்து ஒரு பாவத்தைச் செய்துள்ளன’ என்று சிா்சா கூறினாா்.

‘எதிா்க்கட்சிகளால் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை என்றென்றும் முடக்கி வைக்க முடியாது’ என்று மிஸ்ரா கூறினாா்.

சஞ்சீவ் ஜா, குல்தீப் குமாா், விஷேஷ் ரவி மற்றும் அஜய் தத் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ‘இதுவரை ஏன் ஒரு பெண், பாஜக அல்லது ஆா்.எஸ்.எஸ். தலைவராக நியமிக்கப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், மேற்கு வங்க மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்ததாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.