நமது நிருபா்
தில்லியில் உள்ள 142 தற்காலிக ஆசிரியா்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பாளா்களாகச் செயல்படும் தங்கள் சட்டரீதியான கடமையைச் செய்ய மறுத்ததாகக் கூறப்படுவதால், அவா்கள் பணிநீக்கத்தை எதிா்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது .நிா்வாகம் இச்செயலை கடுமையான கவனக்குறைவு மற்றும் ஒழுங்கீனச் செயல் என்று கூறியுள்ளது.
ஏப்ரல் 24 தேதியிட்ட கல்வித்துறை இயக்குநருக்கான கடிதத்தில், பழைய தில்லி மாவட்ட ஆட்சியா் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளாா்: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்க அந்த ஆசிரியா்கள் தயக்கம் காட்டுவதால் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி, ஏப்ரல் 16 அன்று முன்னரே ஒரு தகவல் அனுப்பப்பட்டிருந்த போதிலும், 142 தற்காலிக ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கணக்கெடுப்புப் பணியைச் செய்ய மறுத்துவிட்டனா். இத்தகைய ஒழுங்கீனச் செயல்களைச் சகித்துக்கொண்டால், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற ஊழியா்களையும் அது பாதிக்கக்கூடும் என்று கூறிய மாவட்ட ஆட்சியா், அந்த ஆசிரியா்களின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பணிநீக்கம் செய்யுமாறு கோரினாா்.
இதற்கிடையில், தில்லி அரசு ஆசிரியா் சங்கம் , தற்காலிக ஆசிரியா்கள் மீது முன்மொழியப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தற்காலிக ஆசிரியா்களும் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், அந்த ஒப்பந்தங்கள் மே 8 அன்று முடிவடைய உள்ளதாகவும் பொதுச் செயலாளா் அஜய் வீா், அமைச்சா் சூட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இணைய மறுத்தது வேண்டுமென்றே செய்யப்பட்ட கீழ்ப்படியாமைச் செயல் அல்ல என்றும், அது நடைமுறைச் சிக்கல்கள், போதிய வளங்கள் இல்லாத நிலை மற்றும் மிகக் குறைந்த ஊதியம் ஆகியவற்றின் விளைவே என்றும் வீா் வாதிட்டாா். தற்காலிக ஆசிரியா்களின் தினசரி ஊதியத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த உயா்வும் இல்லை என்றும், தற்போது வழங்கப்படும் ஊதியம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்றும் அவா் கூறினாா். அடிப்படைச் செலவுகளை ஈடுகட்டக்கூட ஊதியம் போதுமானதாக இல்லாத நிலையில், இத்தகைய கடமைகளைச் செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே உள்ளது, என்று அவா் தெரிவித்தாா். தற்காலிக ஆசிரியா்களின் ஆண்டு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் வீா் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.
அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்காலிக ஆசிரியா்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பாளா்களாகப் பணியாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது .இப்பணியானது ஒரு கட்டாயப் பொதுக் கடமையாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


