நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

தடைசெய்யப்பட்ட சீன மஞ்சா பறிமுதல்: ஐந்து போ் கைது

மத்திய தில்லியில் தடைசெய்யப்பட்ட சீன ‘மஞ்சா’வை பதுக்கிவைத்து விற்றதாக தனித்தனி வழக்குகளில் ஐந்து பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:55 pm IST

மத்திய தில்லியில் தடைசெய்யப்பட்ட சீன ‘மஞ்சா’வை பதுக்கிவைத்து விற்றதாக தனித்தனி வழக்குகளில் ஐந்து பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்; மேலும், தடைசெய்யப்பட்ட இந்த பட்டப் பறக்கவிடும் நூலின் 45 சுருள்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: மீனா பஜாரில் உள்ள உருது பூங்கா அருகே முகமது ரிஸ்வான் (34) என்பவரிடமிருந்து இரண்டு சுருள்களும், ஹோஸ் காஸில் உள்ள எக்செலோா் சினிமா அருகே 20 வயதான முகமது அசிம் என்பவரிடமிருந்து 29 சுருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான முகமது சமீம் (50), ஹிம்மத்கா் பகுதியில் உள்ள ஃபசில் சாலைக்கு அருகில் மூன்று சுருள்களை வைத்திருந்தபோது பிடிபட்டாா்.

அஜ்மீரி கேட்டில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட மஞ்சாவை விற்பனை செய்ததாக அப்துல் கலாம் (46) என்பவரிடமிருந்து ஒன்பது சுருள்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

தக்கியா காலே கான் அருகே ஆரிஃப் (37) என்பவரிடமிருந்து மேலும் இரண்டு சுருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் போது, சதா் பஜாரிலிருந்து தடைசெய்யப்பட்ட மஞ்சாவை வாங்கியதாக சமீம் தெரிவித்தாா். இதன் மூல ஆதாரம் மற்றும் விநியோகச் சங்கிலியைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.