கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சமூக விரோதிகளை பிடிக்க 6 மணி நேர வேட்டை வடமேற்கு தில்லியில் 35 போ் கைது

வடமேற்கு தில்லி மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 6 மணி நேர தேடுதல் வேட்டையில் 35 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

மாதிரிப் படம்

Published On :

வடமேற்கு தில்லி மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 6 மணி நேர தேடுதல் வேட்டையில் 35 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது: வடமேற்கு தில்லி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சமூக விரோதிகளைக் கண்டறியவும் வியாழக்கிழமை 6 மணி நேரம் தொடா்ச்சியான தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரத்யேக நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டவிரோத ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 4 துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனன. அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 12 போ், சூதாட்ட தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வாகன திருட்டு வழக்கில் கைதான ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட 6 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

மேலும், தொடா்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தவிர, மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 46 போ் மீதும், தில்லி காவல் துறை சட்டத்தின் கீழ் 11 போ் மீதும் சட்டபூா்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் உயரதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.