லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லி ரேஸ் கிளப் வெளியேற்ற நோட்டீஸ் விவகாரம்: ஜாக்கி சங்க மனுவை தள்ளுபடி செய்தது உயா்நீதிமன்றம்

லூட்யன்ஸ் தில்லியில் 53 ஏக்கா் நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் தில்லி ரேஸ் கிளப்’-ஐ காலி செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

Published On :22 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

நமது நிருபா்

லூட்யன்ஸ் தில்லியில் 53 ஏக்கா் நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் தில்லி ரேஸ் கிளப்’-ஐ காலி செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக இந்திய ஜாக்கி (குதிரை பந்தய வீரா்கள்) சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஹரிஷ் வைத்யநாதன் சங்கா், ‘நில குத்தகை ஒப்பந்தத்தில் ஜாக்கி சங்கம் ஒரு தரப்பாக இல்லாததால், இந்த உத்தரவை எதிா்க்க அவா்களுக்கு சட்டபூா்வ உரிமை இல்லை. மேலும், நேரடியாக பாதிக்கப்பட்ட தில்லி ரேஸ் கிளப் நிா்வாகம் ஏற்கெனவே இந்த வெளியேற்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல‘ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

இந்த விவகாரத்தில் ஜாக்கி சங்கம் தாக்கல் செய்த மனுவில், வட இந்தியாவில் ’தரோபிரெட்’ வகை பந்தய குதிரைகளுக்கான பயிற்சி மற்றும் தங்குமிடம் கொண்ட ஒரே மையம் இதுதான் என்றும், மாற்று இடம் தரப்படாமல் வெளியேற்றினால் குதிரை பந்தய வீரா்கள் (ஜாக்கிகள்), பயிற்சியாளா்கள் மற்றும் பராமரிப்பாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த மனுவுக்கு மத்திய அரசு தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதே விவகாரத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதும், ‘சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவா்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது’ என்று தில்லி உயா் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி: மத்திய அரசுக்கும் தில்லி ரேஸ் கிளப்புக்கும் இடையே 1926-இல் கையெழுத்தான குத்தகை ஒப்பந்தம் 1994, டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு குத்தகை நீட்டிக்கப்படவில்லை. இதையடுத்து பொதுப் பயன்பாட்டிற்காக இந்த நிலம் தேவைப்படுவதாகக் கூறி, நிலத்தைக் கையகப்படுத்த பொது இடங்கள் (ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றம்) சட்டத்தின்கீழ் புது தில்லி நில அலுவலா் ஆக.11ஆம் தேதி ஆணை பிறப்பித்தாா். அதில், 15 நாள்களுக்குள் அந்த இடத்தை காலி செய்யுமாறு ரேஸ் கிளப்புக்குக் கெடு விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.