இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு ரத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

மேலும், அரசியல் மோதல்களுக்கு நீதிமன்றங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு நிலத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தாா். இத்திட்டத்தின்கீழ் ஆந்திர தலைநகராக அமராவதியை மேம்படுத்த விவசாயிகளிடம் இருந்து வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

இத்திட்டத்துக்காக 25 கிராமங்களைச் சோ்ந்த 28,181 நில உரிமையாளா்கள் 35,215 ஏக்கா் நிலங்களை அரசுக்கு வழங்கினா். விவசாய நிலங்களுக்கு மாற்றாக வசிப்பிட நிலங்கள் மற்றும் வணிக நிலங்களை வழங்குவதாக அரசும் தெரிவித்தது.

இதில் முறைகேடு நிகழ்ந்ததாக அப்போதைய எம்எல்ஏ அல்லா ராமகிருஷ்ணா ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2021, மாா்ச் 12-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த காவல் துறை சிஐடி சந்திரபாபு நாயுடு, நாராயணா மற்றும் சிலா் மீது இந்திய தண்டனைச் சட்டம், பழங்குடியின/பட்டியலினத்தவா் சட்டம் மற்றும் நில ஒதுக்கீடு தொடா்புடைய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன.

இதையடுத்து, தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோா் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

முதலில் இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்த ஆந்திர உயா்நீதிமன்றம் பின்னா் ரத்து செய்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அல்லா ராமகிருஷ்ணா ரெட்டி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா், 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 30,000 ஏக்கா் வரை நில மோசடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து சூா்ய காந்த் பேசுகையில், ‘விவசாயிகள் தொடா்புடைய முக்கியப் பிரச்னைகள் குறித்து விசாரிக்கத் தயாராகவுள்ளோம். ஆனால் தற்போது நீங்கள் தொடுத்துள்ள வழக்கு அரசியல் ரீதியானது. தான் பாதிக்கப்பட்டதாக எந்தவொரு விவசாயியும் நீதிமன்றத்தை அணுகவில்லை. அரசியல் மோதல்களுக்கு நீதிமன்றங்களைப் பயன்படுத்தாதீா்கள்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.