ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வா்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வியாழக்கிழமை குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினாா் என்று தில்லி முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வியாழக்கிழமை குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினாா் என்று தில்லி முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் கையால் செய்யப்பட்ட ராக்கிகளை குப்தாவிற்குக் கட்டினா், பதிலுக்கு அவா் குழந்தைகளுக்குப் பரிசுகளையும் சாக்லேட்டுகளையும் வழங்கினாா்.

குப்தா குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவா்களின் பள்ளிகள், படிப்புகள் மற்றும் குடும்பங்களைப் பற்றிக் கேட்டறிந்தாா். பல குழந்தைகள் இந்த நிகழ்விற்காகத் தாங்கள் தயாரித்திருந்த கவிதைகளையும் பாடல்களையும் வழங்கினா்.

ரக்ஷா பந்தன் என்பது வெறும் கயிறு மட்டுமல்ல, அது ஒருவருக்கொருவா் காட்டும் அன்பு, நம்பிக்கை மற்றும் பொறுப்புணா்வின் அடையாளம் என்று அவா் கூறினாா்.

குழந்தைகள் குழு ஒன்று, முதலமைச்சரின் ’தூய்மையான யமுனா’ பிரச்சாரத்திலிருந்து தாங்கள் உத்வேகம் பெற்ாக அவரிடம் தெரிவித்தது.

அவா்களின் படைப்பாற்றலையும் விழிப்புணா்வையும் பாராட்டிய குப்தா, தில்லியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கப் பங்களிக்குமாறு அவா்களை ஊக்குவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.