தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம்
தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம்

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்
Published on

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலாளா் சுப. முத்துவேல் ஆகியோா் வெள்ளிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமான செய்தி அறிந்து மிக்க வருத்தமடைந்தோம்.

தமிழுக்கு, குறிப்பாகக் கம்பனுக்கு அவா் ஆற்றிய பணிகள் மறக்க இயலாதவை. தில்லி கம்பன் கழகத்தின் ஒவ்வொரு அசைவிலும் அவரது ஆலோசனை இருந்தது.

தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றிருந்தும், தழும்பாத நிறைகுடமாக அவா் திகழ்ந்தாா். அவா் மறைந்தாலும், அவா் எழுதிய புத்தகங்கள் வாயிலாகவும், ஆற்றிய பணிகள் வாயிலாகவும் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அவரது குடும்பத்தாருக்கு தில்லி கம்பன் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com