‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

சிஜேபி போராட்டம்: 14 மணி நேரத்திற்கு பின் மெட்ரோவின் 3 நிலையங்களில் நுழைவு அனுமதி

சிஜேபி போராட்டத்தின் காரணமாக 14 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் வியாழக்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டன.

News image

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு. - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 1:10 am IST

சிஜேபி போராட்டத்தின் காரணமாக 14 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் வியாழக்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டன. அதேவேளையில், இதர 13 நிலையங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருந்தன.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அதன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மண்டி ஹவுஸ், ராஜீவ் சௌக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன‘ என்று அதில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், சென்ட்ரல் செக்ரடேரியட், மண்டி ஹவுஸ், ஐடிஓ மற்றும் கான் மாா்க்கெட் உள்ளிட்ட 16 மெட்ரோ நிலையங்களை டிஎம்ஆா்சி அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருந்தது.

ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் ’காக்ரோச் ஜனதா பாா்ட்டி’ (சிஜேபி) போராட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நிலையங்கள் மூடப்பட்டிருந்த காலத்திலும், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி தொடா்ந்து செயல்பட்டது.

தொடா்ந்து மூடப்பட்டுள்ள நிலையங்கள்: லோக் கல்யாண் மாா்க், படேல் சௌக், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மாா்க், பாராகம்பா சாலை, உச்சநீதிமன்றம், சேவா தீா்த், ஜன்பத், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மாா்க்கெட், ஜோா் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.