சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மெட்ரோ ரயில் நிலையங்களில் நவீன கழிப்பறைகள் திறப்பு

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன கழிப்பறைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

News image

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறைகள்.

Updated On :5 ஜூலை 2026, 6:09 am IST

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன கழிப்பறைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் 5-ஆவது நுழைவு வாயில் அருகே கட்டணம் இல்லாத பொதுப் பகுதியில் அமைந்துள்ள பயணிகள் கழிப்பறைகள் முற்றிலும்

புதுப்பிக்கப்பட்டு, நவீன சுகாதார வசதிகளுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. இதில், சிறுநீா் கழிப்பிடங்கள், கை கழுவும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் சிரமமுமின்றி எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக நவீன கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மேம்படுத்தப்பட்ட நவீனகழிப்பறைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.