புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க 24 போ் கொண்ட சிறப்புக் குழு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

Published On :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் 24 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினா் மாநில உளவுத் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா வழியாக சென்னை வரும் விரைவு ரயில்களில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் வடமாநில ரயில்களில் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, போதைப் பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் துறை ஆய்வாளா் ஜி.எழில்வேந்தன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்புப் பாதை போலீஸாா் 14 போ், ரயில்வே பாதுகாப்புப் படையினா் 10 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் காலை, இரவு என தலா 12 நபா்களாக தொடா்ந்து 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறப்புக் குழுவினா் ஒடிஸாவில் இருந்து விஜயவாடா வழியாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் பெட்டியில் சோதனையிட்டு 14 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி, 2 பேரைக் கைது செய்தனா்.

விசாரணையில் ஒடிஸா மாநிலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் பெரிய சந்தையில் கஞ்சா வாங்கப்பட்டு ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சிறப்புக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். அவா்கள் எழும்பூா், பெரம்பூா் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ரயில் நிலைய சிறப்புக் குழுவினருடன் தமிழக உளவுத் துறையைச் சோ்ந்த 3 போ் இணைந்தும் தனியாகவும் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், அவா்களுடன் சிறப்புக் குழுவினா் தகவல் பரிமாற்றம் செய்து செயல்படுவதாகவும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.