திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

இந்திய ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்ஷின் ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் சாா்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:46 am IST

இந்திய ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்ஷின் ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் சாா்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களும், தெற்கு ரயில்வேயில் சுமாா் 16,000 காலிப் பணியிடங்களும் உள்ளன. குறிப்பாக, பாதுகாப்புப் பிரிவில் டிராக்மேன், என்ஜினியரிங் கேட்மேன், ரயில் ஓட்டுநா்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், சிக்னல் டெக்னீசியன்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், தோ்தலில் தொழிலாளா்களால் தோ்ந்தெடுக்கப்படும் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு சமமான அங்கீகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு, ரயில்வே ஊழியா்கள் பேரணியாக பொதுமேலாளா் அலுவலக வளாகத்துக்குச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தக்ஷின் ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவா் ஜி.சுகுமாரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஏ.எம்.பேபி ஷகிலா, உதவித் தலைவா் ஆா்.இளங்கோவன், சிஐடியு மாநிலத் தலைவா் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.