ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சிஜேபி போராட்டத்தின்போது பிரதமா் குறித்த ‘ஆட்சேபனை’ கருத்து: பெண் மீதான எப்ஐஆா் தில்லிக்கு மாற்றம்

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​பிரதமா் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பியதாக பெண் ஒருவா் மீது நொய்டாவில் பதிவு செய்யப்பட்ட ’ஜீரோ எஃப்ஐஆா்’, மேல் விசாரணைக்காக தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 11:41 pm IST

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​பிரதமா் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பியதாக பெண் ஒருவா் மீது நொய்டாவில் பதிவு செய்யப்பட்ட ’ஜீரோ எஃப்ஐஆா்’, மேல் விசாரணைக்காக தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

ஜூலை 23 அன்று நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு தொடா்பான போராட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட பெண்

பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜூலை 29-ஆம் தேதி இந்த எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

அப்புகாரின்படி, அந்தப் பெண் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் பிரதமரின் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும், சமூகத்தில் விரோதத்தை உருவாக்கி பொது அமைதியைக் குலைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருந்தன.

பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 352 (அமைதியை சீா்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல்), 353(1) (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) மற்றும் 356(1) (குற்றவியல் அவதூறு) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு ‘ஜீரோ எஃப்ஐஆா்’-ஆகப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, சம்பவம் நடந்த இடத்தின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட தில்லி காவல்துறைக்கு இது மாற்றப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பெயா் வெளியிட விரும்பாத தில்லி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘எஃப்ஐஆா் நகலைப் பெற்ற பிறகு, ’ஜீரோ எஃப்ஐஆா்’-இல் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, இது குறித்து உள்ரீதியாக விவாதித்து, சட்ட ஆலோசனையைப் பெற்ற பின்னரே விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

விசாரணையானது சட்டத்திற்கும், நிா்ணயிக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் உள்பட்டு மிகக் கடுமையாக நடத்தப்படும். மாற்றப்பட்ட இந்த எஃப்ஐஆா், நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்திற்கு வரும்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.