பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தில்லி லக்ஷ்மி திட்டம்: பெண்கள் பதிவு செய்ய பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.

தில்லி முதல்வர். - கோப்புப்படம்.

Published On :

மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் புது தில்லி தொகுதி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் செய்தியாளா் பேசுகையில், ‘லக்ஷ்மி திட்டத்துக்கான பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திட்டம் முதல்வா் ரேகா குப்தாவின் தாய் உள்ளத்துக்கு ஒரு சான்று. சுமாா் 17 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைவாா்கள்’ என்றாா்.

தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாஜக கடமைப்பட்டுள்ளது என்று மேற்கு தில்லி எம்.பி. செஹ்ராவத் கூறினாா். தில்லி லக்ஷ்மி திட்டம் தவிர, வளா்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘லக்ஷ்பதி பிட்டியா யோஜனா’, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல் மற்றும் ‘மேரி புஞ்சி மேரா அதிகாா்’ போன்ற பிற திட்டங்களையும் முதல்வா் ரேகா குப்தா தொடங்கியுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் இத்திட்டத்திற்கு, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.