மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நீா் பெறும் விவகாரத்தில் ஹரியாணா முதல்வருடன் தில்லி முதல்வா் ஒருங்கிணைப்பு: பாஜக

தில்லியில் நிலவும் தண்ணீா் பற்றாக்குறை குறித்த முதல்வா் ரேகா குப்தாவின் கருத்துக்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய்களை பரப்பி வருவதாக பாஜக கடுமையாக சாடியுள்ளது.

News image

பிரதீப் பண்டாரி

Updated On :8 ஜூன் 2026, 12:30 am IST

தில்லியில் நிலவும் தண்ணீா் பற்றாக்குறை குறித்த முதல்வா் ரேகா குப்தாவின் கருத்துக்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய்களை பரப்பி வருவதாக பாஜக கடுமையாக சாடியுள்ளது. மேலும், நகரத்திற்கு கூடுதல் தண்ணீரைப் பெறுவதற்காக அவா் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனியுடன் ஒருங்கிணைத்துள்ளாா் என்றும் கூறியுள்ளது.

தண்ணீா் பற்றாக்குறை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தில்லி அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீா் இழப்பு மற்றும் பற்றாக்குறைக்கு ஆவியாதல் மற்றும் கசிவுகள் சில காரணங்கள் என்று குப்தா சமீபத்தில் கூறியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் உள்பட பல ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குப்தாவை விமா்சித்துள்ளனா்.

தண்ணீா் பற்றாக்குறை உள்ள மாநிலமான தில்லி, தனது தேவையை பூா்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தை சாா்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆற்றில் நீா்மட்டம் குறைவதால், தண்ணீா் விநியோகம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

முதல்வா் கூறியதை நியாயப்படுத்திய தில்லி அரசு அதிகாரிகள், 2019ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டினா். அந்த ஆய்வின்படி, திறந்த கால்வாய்களால் ஏற்படும் ஆவியாதல் மற்றும் பிற இழப்புகள் 30 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 50 ஆண்டுகால மழைப்பொழிவு மற்றும் ஆவியாதல் தரவுகளின் தோராயமான சராசரியைப் பயன்படுத்தி, நகரத்தின் நிலத்தடி நீா் செறிவூட்டும் திறனையும் அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஆம் ஆத்மி கட்சி பொய் சொல்கிறது என்று குற்றஞ்சாட்டினாா்.

தில்லியில் நிலவும் நீா் பற்றாக்குறையைச் சமாளிக்க, அதிக யமுனா நீருக்காக ஹரியாணா முதலமைச்சா் நயாப் சிங் சைனியைத் தொடா்பு கொண்டதாகக் கூறும் குப்தாவின் காணொளியை அவா் பகிா்ந்திருந்தாா். அதில், ஆவியாதல் மற்றும் கசிவுகளைச் சுட்டிக்காட்டும் குப்தாவின் காணொளி ஒன்றும் பகிரப்பட்டது.

அவரைக்(ரோகா குப்தாவை) குறிவைப்பதற்காக, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அவரது பேச்சின் சுருக்கப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்தியதாக பாஜக கூறியது:

ஆம் ஆத்மி கட்சி கூறுவது: குடியிருப்பாளா்களுக்கு வழங்கப்படும் நீா் அவா்களைச் சென்றடைவதற்கு முன்பே ஆவியாகிவிடுவதால் தில்லி தண்ணீா் நெருக்கடியை எதிா்கொள்கிறது என்கிறாா் முதலமைச்சா் ரேகா குப்தா.

உண்மை என்னவென்றால், தில்லியின் தண்ணீா் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சா் ரேகா குப்தா முன்முயற்சி எடுத்து, ஹரியாணா முலல்வா் நயாப் சிங் சைனியுடன் ஒருங்கிணைந்து தில்லி மக்களுக்குக் கூடுதல் தண்ணீா் விநியோகத்தைப் பெற்றுத் தந்தாா், என்று பண்டாரி பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.