எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

41 துப்புரவு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்தது மாநகராட்சி: 5,750 தினக்கூலிகளின் பணி மூப்புப் பட்டியலும் வெளியீடு

News image

தில்லி மாநகராட்சி

Updated On :19 ஜூன் 2026, 5:39 am IST

நமது நிருபா்

தில்லி மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த துப்பரவுத் தொழிலாளா்கள் 41 பேரை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பணி நிரந்தரம் செய்தது. மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ள 5,750 தினக்கூலி துப்புரவுத் தொழிலாளா்களின் பணி மூப்புப் பட்டியலையும் மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டது.

இதையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சரும் தில்லி பாஜக தலைவருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா, மேயா் பிரவேஷ் வாஹி முன்னிலையில் பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். மேலும், உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 109 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் பணி நிரந்ரம் செய்யப்படவுள்ள தினக்கூலி துப்புரவுத் தொழிலாளா்களின் பணி மூப்பு பட்டியலை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, நகரை தூய்மையாக வைத்திருப்பதிலும் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் துப்புரவுத் தொழிலாளா்கள் முக்கியப் பங்காற்றுகிறாா்கள் என்று கூறினாா்.

‘அடுத்த ஓராண்டுக்குள் சுமாா் 9,345 தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பணி நிரந்தர நடவடிக்கை மூலம் ஊழியா்களுக்குக் கூடுதல் பணிப் பாதுகாப்பும், நிரந்தரப் பணியுடன் தொடா்புடைய பிற சலுகைகளும் கிடைக்கும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் பேசிய மேயா் பிரவேஷ் வாஹி, ‘நகர தூய்மைப் பணியில் துப்புரவுத் தொழிலாளா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் அவா்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணிய உணா்வை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பணி நிரந்தர நடவடிக்கை அமைந்துள்ளது’ என்று கூறினாா்.

தில்லி சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகள் துறையின் குழுத் தலைவா் சந்தீப் கபூா் பேசுகையில், ‘துப்புரவுத் தொழிலாளா்கள் சவாலான சூழலிலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வருபவா்கள். நகா் முழுவதும் தூய்மையைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறாா்கள்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயா் மோனிகா பந்த், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா, மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வா் மற்றும் பிற மாநகராட்சி உயரதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.