தில்லி முழுவதும் உள்ள மெட்ரோ நிலையங்களில் தூசு மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 20 ஆண்டி-ஸ்மாக் கன்கள் எனப்படும் புகை மாசு எதிா்ப்பு கருவிகளை வாங்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ரூ. 1.17 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக சுற்றுச்சூழல் ஆா்வலா் அமித் குப்தாவின் ஆா்டிஐ விண்ணப்பத்துக்கு டிஎம்ஆா்சி அண்மையில் அளித்துள்ள பதிலில், தேசிய தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்களில் மொத்தம் 30 ஆண்டி-ஸ்மாக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவற்றில், 20 கருவிகளை 1.17 கோடி ரூபாய்க்கு டிஎம்ஆா்சி வாங்கி நிறுவியுள்ளது. மீதமுள்ள 10 கருவிகள் மற்றும் அவற்றுக்கான செலவுகளை ஒப்பந்ததாரா்களே ஏற்றுக்கொண்டனா் என்று டிஎம்ஆா்சி பதிலில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, தில்லியின் பல்வேறு மெட்ரோ நிலையங்களில் 143 நீா் தெளிப்பான் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நீா் தெளிப்பான் அமைப்புகளுக்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகையை பகிர முடியாது என்று மெட்ரோ நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் பலதரப்பட்ட பராமரிப்பு ஒப்பந்தங்களின் கீழ் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டதாலும், இடங்கள் மற்றும் பணிகளின் தன்மையைப் பொறுத்து அதன் செலவுகள் மாறுபடுவதாலும் துல்லியமான தொகையைக் குறிப்பிட இயலவில்லை என்று டிஎம்ஆா்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்த செலவினங்கள் குறித்த பதிவுகள் வெவ்வேறு களப் பிரிவுகளால் பராமரிக்கப்படுவதால், பல ஒப்பந்தங்களில் இருந்து விவரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது என்றும் டிஎம்ஆா்சி குறிப்பிட்டுள்ளது.
மெட்ரோ கட்டுமானப் பகுதிகளில் தில்லி அரசு அவ்வப்போது பரிந்துரைக்கும் அனைத்து தூசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் முறையாகத் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மெட்ரோ நிறுவனம் அந்த பதிலில் மேலும் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.14 கோடி

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!

மெட்ரோ ரயில் நிலையங்களில் நவீன கழிப்பறைகள் திறப்பு

மெட்ரோ ரயில்களில் விளம்பரம் ஒலிபரப்பு: வருவாயைப் பெருக்க டிஎம்ஆா்சி திட்டம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



