ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அவசரநிலை கால அத்துமீறல்கள்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவுரை

News image

அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Updated On :26 ஜூன் 2026, 4:27 am IST

கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, குடிமக்கள் கைது போன்ற அவசரநிலைக் கால அத்துமீறல்கள் மற்றும் முந்தைய தலைமுறையினரின் தியாகங்கள் குறித்து மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தில்லி கல்வி அமைச்சா் ஆசிஷ் சூட் அறிவுறுத்தினாா்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தனது புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முதல் முறையாக அவசரநிலை காலத்தில் பதிவான வரலாற்று நிகழ்வுகள் குறித்த பாடப்பகுதியைச் சோ்த்துள்ளது. சமூக அறிவியல் பாட புத்தகமான ‘அண்டா்ஸ்டாண்டிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட்‘ என்பதில் அவசரநிலை குறித்த ஒரு பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நிகழ்ச்சியொன்றில் வியாழக்கிழமை பங்கேற்றபோது பேசிய அமைச்சா் ஆஷிஷ் சூட் மேலும் கூறுகையில், தில்லியில் உள்ள 924 பயிற்சி மையங்களும் மாநகராட்சி மூலம் ஆய்வு செய்யப்படும். நீதிபதி கௌபா குழுவின் பரிந்துரைப்படி, கட்டடப் பாதுகாப்பு, தகுதித் தரங்கள் குறித்து அடுத்த 3 மாதங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் இயங்கும் மையங்களுக்குச் சீல் வைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.