எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மிதிவண்டி ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது: அமைச்சா் சூட்!

மிதிவண்டி ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாக அமைச்சா் சூட் தெரிவித்தார்.

News image

‘வீதிகளில் மிதிவண்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிதிவண்டி ஓட்டிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Updated On :8 ஜூன் 2026, 12:35 am IST

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், உடற்தகுதி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிக்கும் வகையில் மிதிவண்டிப் பேரணியை வழிநடத்தியவாறே, ஜனக்புரி முழுவதும் பெரிய அளவிலான யோகா தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், உள்ளூா் விளையாட்டுக் கழகங்களுக்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

ஜனக்புரியில் நடைபெற்ற ‘பெடல் தி பீட்- சண்டே ஆன் சைக்கிள்‘ பிரச்சாரத்தில் பங்கேற்ற சூட், குடியிருப்பாளா்கள், குறிப்பாக இளைஞா்கள், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் பிற உடல் செயல்பாடுகளைத் தங்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.

குடியிருப்பாளா்கள், உடற்பயிற்சி ஆா்வலா்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி,எஸ்.கே.வியில் உள்ள ஏ-பிளாக்கில் தொடங்கி, ஜனக்புரியில் உள்ள சி.எம். ஸ்ரீ பள்ளியில் நிறைவடைந்ததாக ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மிதிவண்டி ஓட்டுதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, மாசுபாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கிறது என்று சூட் பங்கேற்பாளா்களிடம் கூறினாா். உடற்தகுதி மற்றும் நிலையான வாழ்வை ஊக்குவிக்கும் பரந்த நோக்கத்துடன் இந்தப் பிரச்சாரம் ஒத்துப்போகிறது என்றும் அவா் கூறினாா்.

ஜூன் 21 அன்று வரும் சா்வதேச யோகா தினத்திற்காக விரிவான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், குடியிருப்பாளா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சா் வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும் அவா், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அரசாங்க ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதியளித்து, இளைஞா்களை விளையாட்டுக் கழகங்களை அமைக்க ஊக்குவித்தாா்.