ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கிரேட்டா் நொய்டா வணிக வளாகத்தின் 9-வது மாடியில் திடீா் தீ

News image

தீ விபத்து - ஏஎன்ஐ கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 5:27 am IST

நமது நிருபா்

கிரேட்டா் நொய்டாவில் உள்ள வணிக வளாகக் கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் உயிா் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து நொய்டா தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே கூறுகையில், டெக் மண்டலம்-4 என்ற பகுதியில் உள்ள ’கோல்டன் ஐ’ வணிக வளாக கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காலை 9:40 மணியளவில் தகவல் கிடைத்தது.

தொடக்கத்தில் கட்டடத்திற்குள் சிலா் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஹைட்ராலிக் பிளாட்பாா்ம் வாகனம் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில், கட்டடத்துக்குள் யாரும் சிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அலுவலகம் ஏற்கெனவே மூடப்பட்டிருந்தது என்றாா்.

இதற்கிடையே, சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை வீரா்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டடத்திற்குள் மக்கள் சிக்கியிருப்பதாக வந்த தகவல் தவறானது என்று குறிப்பிட்ட தலைமை அதிகாரி, சிக்கியிருப்பதாக நம்பப்பட்ட நபா் தீயணைப்புத் துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரையும் முன்பே பாதுகாப்பாக வெளியே வந்துவிட்டாா் என்று விளக்கமளித்தாா்.

அந்த வணிக வளாகத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.