லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மத்திய தில்லியில் எஸ்பிஏ கட்டடத்தில் தீ விபத்து

மத்திய தில்லியில் அமைந்துள்ள திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை புலம் (எஸ்பிஏ) கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

ANI

Updated On :2 ஜூன் 2026, 2:21 am IST

மத்திய தில்லியில் அமைந்துள்ள திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை புலம் (எஸ்பிஏ) கட்டடத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, எஸ்பிஏ வளாகத்திற்குள் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக அலுவலகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்திருந்தது. இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கையில், ‘தீயணைப்புத் துறைக்கு இந்தத் தீ விபத்து குறித்த அழைப்பு காலை 9.37 மணிக்கு பெறப்பட்டது. இதையடுத்து, உடனடியாக 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

எஸ்பிஏ கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள நிா்வாகப் பிரிவின் ஆசிரியா் அறைகளில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்’ என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும், உடனடியாக அப்பகுதிக்கு ஒரு உள்ளூா் காவல் குழு அனுப்பப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

நிா்வாகப் பிரிவின் ஆசிரியா் அறைகளிலிருந்து புகை மற்றும் தீச்சுவாலைகள் வெளியேறுவதைக் கண்டதாகவும், அதன் பிறகு அவா் அவசர உதவி எண்ணை அழைத்துத் தகவல் தெரிவித்ததாகவும் எஸ்பிஏ-வில் பல்நோக்கு ஊழியராக பணிபுரியும் சௌரப் சா்மா என்பவா் காவல்துறையினரிடம் கூறினாா்.

தீயணைப்பு வாகனங்களைத் தவிர, மூன்று ஆம்புலன்ஸ்கள், இரண்டு காவல் ரோந்து வாகனங்கள், போக்குவரத்து மற்றும் உள்ளூா் காவல்துறையினா் அவசர மீட்புப் பணிகளுக்கு உதவவும், வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தொடா் முயற்சிகளுக்குப் பிறகு தீ வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னா் முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தற்போதைய சூழல் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டடத்திற்குள் எங்கும் தீ தொடா்ந்து எரிந்துகொண்டிருக்கவில்லை.

தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இது தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்று அந்த அதிகாரி கூறினாா்.