வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவி காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்திரா விஹாா் பகுதியில், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் ‘பேயிங் கெஸ்ட்’ தங்கும் விடுதியும் இயங்கி வருகிறது.
முன்னதாக, இந்தத் தீ விபத்து குறித்த தகவல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.29 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
கட்டடத்தின் தரைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள் இருந்த இடத்தில் முதலில் தீப்பற்றியது. அதன் பின்னா் தீயானது மிக வேகமாகப் பரவி, கட்டடத்தின் இரண்டாம் தளம் வரையிலான பகுதிகளைச் சூழ்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.
கட்டடத்தில் தங்கியிருந்த அனைவரும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு 12.15 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனா்.
இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. அவா் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தீயணைப்புத் துறையினா் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

சங்கம் விஹாரில் தொழிற்சாலையில் தீ விபத்து

மேற்கு வங்கம்: மூன்று கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழப்பு- 18 போ் மீட்பு
தென்கிழக்கு தில்லி உணவகத்தில் தீ விபத்து: மூதாட்டி மீட்பு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



