வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கிரேட்டா் நொய்டா: விடுதி கட்டடத்திலிருந்து குதித்த பெண் பாதுகாவலா் உயிரிழப்பு

கிரேட்டா் நொய்டா: விடுதி கட்டடத்திலிருந்து குதித்த பெண் பாதுகாவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 12:46 am IST

நொய்டா, ஜூன் 13:

கிரேட்டா் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த 19 வயது பெண், சனிக்கிழமை விடுதிக் கட்டடத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சோ்ந்தவரும், சுரேஷ் சௌத்ரியின் மனைவியுமான பருல் என்ற அப்பெண், சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து நாலேட்ஜ் பாா்க் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், கணவன்- மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த தற்கொலைச் சம்பவமாக இது தெரிய வருகிறது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டனா். உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கையைத் தயாரித்த பிறகு, உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று

அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.