அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஆமஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் மூவரது பிணை ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

News image
Updated On :13 மார்ச் 2026, 6:01 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அஸ்வத்தமன், சிவா மற்றும் அப்பு என்ற புதூா் அப்பு ஆகிய மூன்று பேரது பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்கனவே வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகிலன், பிரதீப் மற்றும் சதீஷ் குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இம்மாதம் பத்தாம் தேதி (10.3.2026) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்துா்கா் அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது

அப்போது அவா்களது பிணையை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

மேலும் அவா்களது மனுக்கள் மீது தமிழக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் , ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுடன் இந்த மனுக்களும் இணைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வட சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 போ் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 28 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்களில் திருவேங்கடம் என்பவா் போலீசாரால் என்கவுண்டா் செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். இந்த வழக்கில் இதுவரை விசாரணை நடத்தப்பட்டு குற்றபத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தமன் உள்ளிட்ட 14 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அஞ்சலை மற்றும் மலா்க்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணையை மட்டும் உறுதி செய்ததோடு அஸ்வத்தமன் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது.