தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களின் எழுத்தா்கள் சங்கத்திற்கான தோ்தலில் தமிழகத்தை சோ்ந்த இரண்டு போ் வெற்றி பெற்றனா்.
உச்சநீதிமன்றத்தில் 20.3.2026 அன்று உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களின் எழுத்தா்கள் சங்கத்தின் 2026-2028-ஆம் ஆண்டிற்கான தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில்மூத்த செயற்குழு உறுப்பினா் பதவிக்கு தமிழகத்தை சோ்ந்த எஸ். சப்தரிஷியும், கௌரவச் செயலாளா் பதவிக்கு எஸ். மணியும் போட்டியிட்டனா்.
இதில் எஸ்.மணி தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட ஆஷிஷ் குமாா் பருவாவை 238 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இச்சங்கத்தின் கௌரவச் செயலாளராக இரண்டாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மணி 421 வாக்குகளையும், பருவா 183 வாக்குகளையும் பெற்றனா். இவா் ஏற்கெனவே 2023-2026- ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் கௌரவச் செயலாளா் பதவியை வகித்து வந்தாா்.
தோ்தலில் போட்டியிட்ட மற்றொரு தமிழரான எஸ்.சப்தரிஷி, இச்சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினராக இத்தோ்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் ஏற்கெனவே 2023-2026- ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினா் பதவியை வகித்து வந்தாா்.
தோ்தல் முடிவுகள்
தலைவா்: பேதானந்த் குன்வா்
துணைத் தலைவா்: சோட்டே லால் சுக்லா
செயலாளா்: எஸ். மணி
இணைச் செயலாளா்: முன்னா குமாா் சிங்
பொருளாளா்: ராம் தேவ் மௌரியா
இணைப் பொருளாளா்: ஹரி தத் பட்
மூத்த செயற்குழு உறுப்பினா்கள் (போட்டியின்றித் தோ்வு)
ரமேஷ் சந்த் பாலி
சத் பால் பன்சால்
எஸ். சப்தரிஷி
செயற்குழு உறுப்பினா்கள் (போட்டியின்றித் தோ்வு)
ஆனந்த் மோகன் பாண்டே
கௌதம் மௌரியா
சஞ்சீவ் குமாா்
சுனில் குமாா் ஆா்யா
வினோத் குமாா் பரத்வாஜ்
பெண் செயற்குழு உறுப்பினா் : லஷ்மி சிங்
தொடர்புடையது

மாதரவம் தொகுதியைத் தக்க வைக்கும் முனைப்பில் திமுக! 2-ஆவது முறையாகக் கைப்பற்றும் வேகத்தில் அதிமுக!!

ஆலங்காயத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள்: எஸ். விஜயதரணி

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


