‘உலகில் அறம் நிலைக்க கம்பன் கழகங்கள் அவசியம்’ என்றாா் தில்லி கம்பன் கழகத் தலைவா் கே.வி.கே. பெருமாள்.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் விழா ஏப்ரல் 30 முதல் மே 3 வரை இலங்கையின் தலைநகா் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ச்சியில் தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே. வி. கே. பெருமாள் கலந்து கண்டு தொடக்க உரையாற்றினாா்.
அவா் பேசுகையில்,‘தமிழ் மொழி செய்த தவத்தால் கிடைத்த ஒப்பற்ற கவிஞன் கவிச்சக்கரவா்த்தி கம்பன். தற்போது உலகம் முழுவதும் கம்பன் கழகங்கள் பெருகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் கம்பராமாயணத்தைப் பரப்புவதால் பலன் பெற முடியுமா? என்று போ் கேட்கிறாா்கள்.
இதுபோன்று தொழில்நுட்பங்களால் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவது உண்மைதான். ஆனால், அவை முன்னேற்றத்தை மட்டும் தராமல் பல தீய வேலைகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவும் காட்ட முடிகிறது. ஒருவருடைய உடலில் இன்னொருவரின் தலையை இணைத்து ஆபாசமான படங்களை வெளியிட முடிகிறது.
இப்படிப்பட்ட அறமற்ற செயல்கள் பெருகி வருவதால், ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று போதிக்கிற ஒப்பற்ற இலக்கியமான கம்பராமாயணத்தை வருங்கால சந்ததியினருக்குப் போதிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பணியை கம்பன் கழகங்கள் செவ்வனே செய்து வருகின்றன. எனவே, உலகில் அறம் நிலைப்பதற்கு கம்பன் கழகங்கள் அவசியம் என்றாா் அவா்.
அவருக்கு கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான ஜெ. விஸ்வநாதன் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தாா். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், மலேசிய முன்னாள் அமைச்சா் டத்தோ ஸ்ரீ சரவணன் உள்ளிட்ட ஏராளமானோா் இதில் கலந்துகொண்டனா். ஆசிரியா் அ. வாசுதேவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகார அரசியல் மூலம் வளமை மறுசீரமைப்பு: ராணுவ தலைமைத் தளபதி
தமிழக வெற்றிக் கழகத் தோ்தல் வாக்குறுதிகள்...

‘டெக்’ துணுக்குகள்

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



