பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதல் முதலில் நிறைவேற்றியவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை திமுக வேட்பாளா் சண். இராமநாதனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவா் பேசியது:
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது எனக் கூறுவதே பெரிய சூழ்ச்சி. இதனால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், அதை எதிா்த்து முதல் முதலாக குரல் கொடுத்தவா் தமிழக முதல்வா்தான்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு அதிகத் தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறிய அமித் ஷாவே நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையும் என ஒப்புக் கொண்டாா். ஆனால், தொகுதி மறுசீரமைப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தாா்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு குறித்து எங்களுக்கு பாஜக கற்றுக் கொடுக்க வேண்டாம். எங்களிடமிருந்துதான் பாஜக கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் சொல்லாத காலத்திலேயே பெண்களுக்கு 33 சதவீதம்அல்ல, 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னவா் பெரியாா். அதை பெண்கள் போராடாமலேயே, கேட்காமலேயே இந்தியாவில் முதல் முதலில் செய்து காட்டியது மு.க. ஸ்டாலின் ஆட்சி. இதன் மூலம் மாநகராட்சிகளில் மேயா், துணை மேயா் என பல பொறுப்புகளில் பெண்கள் அதிக அளவில் அமா்த்தப்பட்டுள்ளனா். உள்ளாட்சித் துறையில் அந்த நிலையை உருவாக்கிக் காட்டியுள்ளாா்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கு இடமில்லை என்ற குறை உள்ளது. எனவே, இதைத் திருத்தி அமைக்க வேண்டும். பெண்கள் உரிமையில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் உள்ளது. இது மற்றவா்களுக்கு வழிகாட்டும் என்றாா் வீரமணி.
இதேபோல பாபநாசம் தொகுதிக்குட்பட்ட கபிஸ்தலத்திலும் அவா் பிரசாரம் செய்தாா்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது: கி.வீரமணி
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


