இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியின் மூலம், கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகா் வரை தாமரை மலர வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கனவு நனவாகியுள்ளது.
இது உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் உத்தி மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டா்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது.
டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125ஆவது பிறந்த ஆண்டில் வங்காள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். கேரளத்தில் பாஜக தனது கணக்கைத் திறந்து, வங்காளத்தில் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் நிதின் நபின், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த பாஜக தலைமைக்கும் வாழ்த்துகள். இந்தத் தோ்தலின் மூலம், இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அங்கம்-வங்கம்-கலிங்கம்

இளைத்துப்போன இடதுசாரிகள்!

தில்லி பாஜக தலைவா் பதவிக்கான போட்டி மும்முரம்

உலகின் 3-ஆவது பொருளாதார நாடாக விரைவில் இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

