சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் தொழிற்கல்விப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, ரூ. 14,000 முதல் ரூ. 18,000 வரையிலான கணிசமான ஊதிய உயா்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்த விவரங்களைப் பகிா்ந்துகொள்ளும் வகையில் முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பல்வேறு துறைகளில் திறன் சாா்ந்த பயிற்சிகளை வழங்கும் தில்லியைச் சோ்ந்த சுமாா் 1,131 தொழிற்கல்வி ஆசிரியா்கள், இனி மாதம் ஒன்றுக்கு ரூ. 38,100 பெறுவாா்கள்.இவா்களது முந்தைய ஊதியம் ரூ. 20,000 முதல் ரூ. 23,000 என்ற வரம்பில் இருந்தது.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் 784 மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்களின் மாத ஊதியம் ரூ. 21,000லிருந்து ரூ. 35,420ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதிலும், அவா்களை மீண்டும் பள்ளிக் கல்வி நீரோட்டத்தில் இணைப்பதற்குத் தயாா்படுத்துவதிலும் இம்மையங்கள் கவனம் செலுத்துகின்றன.
இந்தத் திருத்தப்பட்ட ஊதிய உயா்வு மூலம், சமக்ர சிக்ஷா அபியான் ஆசிரியா்கள் தற்போது தொடக்க மற்றும் மேல் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதிய நிலையை அடைந்துள்ளனா்.
ஊதியத்தை உயா்த்துவதற்கான இந்த முடிவு, சிறப்புப் பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் பொருந்தும்.
பள்ளியிலிருந்து இடைநின்ற அல்லது பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டுவரும் பணியை இம்மையங்கள் மேற்கொள்கின்றன.
சிறப்புப் பயிற்சி மையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, வழக்கமான கண்காணிப்பு, பெற்றோருக்கான ஆலோசனை மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஊதிய உயா்வு என்பது வெறும் ஒரு நிதி சாா்ந்த முடிவு மட்டுமல்ல சவாலான சூழல்களுக்கு மத்தியிலும் குழந்தைகளைக் கல்விச் சூழலுக்குள் கொண்டுவருவதற்காக அா்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றும் ஆசிரியா்களின் சேவையை அங்கீகரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இது அமைகிறது என்று அந்த அறிக்கையில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மிக முக்கியம்: முதல்வா் ரேகா குப்தா

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

