கோடை காலத்தில் தலைநகரில் குடிநீா் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில், அனைத்து முக்கிய நீா்சுத்திகரிப்பு நிலையங்களும் (டபிள்யூடிபி) அதிகபட்ச நீா் உற்பத்தி திறனில் இயங்க வேண்டும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிட்டாா்.
கோடை மாதங்களுக்கான நீா் மேலாண்மைத் திட்டத்தை மதிப்பாய்வு செய்த அவா், தில்லி ஜல் வாரிய (டிஜேபி) அதிகாரிகளுக்கு உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தி, நகரின் தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். ‘எங்கள் கவனம் உடனடி நிவாரணத்திற்கே மட்டும் அல்ல. தில்லியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் குடிநீா் பற்றாக்குறையை நீக்க நீண்டகால தீா்வுகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறோம்’ என முதல்வா் தெரிவித்தாா்.
அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, முக்கிய நீா்த் திட்டங்களின் முன்னேற்றத்தையும் அவா் ஆய்வு செய்து, உச்ச தேவை நேரத்தில் விநியோகம் மற்றும் பதிலளிப்பில் எந்த குறையும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தினாா். துவாரகாவில் அமைக்கப்படும் இரண்டாவது 50 மில்லியன் கேலன்கள் தினசரி திறன் கொண்ட நீா்சுத்திகரிப்பு நிலையத்தை விரைவாக செயல்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: அனைத்து நிலைகளிலும் கண்காணிப்பு கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. 9 முக்கிய நீா் சுத்திகரிப்பு நலையங்களும்—சோனியா விஹாா், பாகீரதி, சந்திரவால், வாஜிராபாத், ஹைதா்பூா், நங்க்லோய், ஓக்லா, பவானா மற்றும் துவாரகா—சுமாா் 900 மில்லியன் கேரல் தினசரி நீரை உற்பத்தி செய்கின்றன. கூடுதலாக, 135 மில்லியன் கேலன் தினசரி நீா் போா்வெல்கள் மூலம் பெறப்படுகிறது; அவற்றின் எண்ணிக்கை 5,834 இருந்து 6,200-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஹரியாணாவுடன் இணைந்து கச்சா நீரில் அமோனியா அளவை கண்காணிக்கும் பணியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு புகாரும் உடனடியாக தீா்க்கப்பட வேண்டும்; அலட்சியம் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
மேலும், 1,210 நீா்தாங்கி லாரிகள், சங்கம் விஹாா், மத்தியாலா, சத்தா்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2025-26-ஆண்டில் 520 புதிய போா்வெல்கள் அமைக்கப்பட்டதுடன், 172 கி.மீ பழைய குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் கோடை கால நீா் விநியோகத்தை நிலைநிறுத்த முக்கிய பங்காற்றும் என தெரிவித்தாா்.
தொடர்புடையது

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


